குல்காம் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை - போலீஸ்காரர் வீர மரணம்

காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
என்கவுண்டர்
என்கவுண்டர்
Published on

ஜம்மு:

ஜம்மு மற்றும் காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பரிவான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த என்கவுண்டரில் போலீஸ்காரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 போலீசார் மற்றும் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் என்கவுண்ட்டர் நடத்தி வருகின்றனர் என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com