ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக நோட்டா அறிமுகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு வரம்பை உயர்த்தி ஒடிசா மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நோட்டா
நோட்டா
Published on

ஒடிசாவில் நடைபெறும் பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு, 107 நகராட்சிகள் மற்றும் புவனேஸ்வர், கட்டாக், பெர்ஹாம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறுகிறது.

ஏற்கனவே, ஒடிசா சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் வாக்காளர்களுக்கு நோட்டா வைக்கப்பட்டிருந்தது. இதைக் கருத்தில் கொண்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நோட்டா வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாக்களிக்கும் பேனலில் அனைத்து கட்சியின் சின்னங்களுக்குப் பிறகு கடைசியாக நோட்டா சின்னம் அச்சிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com