ஒமைக்ரான் பரவல் எதிரொலி - உத்தராகண்டில் இரவுநேர ஊரடங்கு அமல்

ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.
இரவுநேர ஊரடங்கு
இரவுநேர ஊரடங்கு
Published on

டேராடூன்:

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஆனாலும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.

ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதையடுத்து அசாம், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தராகண்டிலும் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன்படி, இரவு 11.00 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மறு உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com