கோவில் திருவிழாவில் நிர்வாண நடனம்: சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு- 10 பேர் கைது

ஆந்திராவில் கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது
கைது
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தள்ளரேவு மண்டலம் உப்பங்கலா கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று அதிகாலை வரை நடந்த இந்த திருவிழாவில் கிராமத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதுபற்றிய வீடியோ ஒன்று வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அறிந்த கொரிங்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணிக்கு இடையில் இந்த நடனம் அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மற்ற விவரங்களை சேகரித்து வருகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com