மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் பாதுகாப்பு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு- மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு இன்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை
Published on

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது.

தொடர்ந்து, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ காவலில் உள்ள மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அனைத்து மீட்டெடுப்புகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதால், அவரை காவலில் வைத்திருப்பது எந்தப் பலனையும் அளிக்காது என்று மணிஷ் சிசோடியா தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மணீஷ் சிசோடியா இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

மணீஷ் சிசோடியாவின் 5 நாள் காவலின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com