மணிப்பூரில் இறுதிகட்ட தேர்தல்- 22 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மணிப்பூரில் முதல்கட்ட தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்பூர், காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடந்தது.
வாக்காளர்கள்
வாக்காளர்கள்
Published on

5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 28-ந் தேதி நடந்தது. 2-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று நடந்தது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 8.38 லட்சம் பேர் வாக்களிக்கிறார்கள். இதற்காக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

92 வேட்பாளர்களின் நிலைமையை இன்றைய தேர்தல் முடிவு செய்யும். காங்கிரசில் இருந்து 18 வேட்பாளர்களும், பா.ஜனதாவில் இருந்து 12 வேட்பாளர்களும், தேசிய மக்கள் கட்சியில் இருந்து 11 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். ஜனதா தளம், நாகா மக்கள் முன்னணி கட்சியில் இருந்து தலா 10 பேரும் களத்தில் உள்ளனர்.

மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் இபோபி சிங்கும் முக்கிய வேட்பாளர்களில் ஒருவர் ஆவார். இறுதி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 17 பேர் குற்ற பின்னணி கொண்டவர்கள்.

முதல் கட்ட தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்பூர், காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது.

தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 20 ஆயிரம் துணை ராணுவ வீரர்களும், 5 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படியுங்கள்...திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற அன்றே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com