திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சகா

திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.ஆளுநர் முதல்வர் மாணிக் சகாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
திரிபுரா முதல்வராக பதவியேற்றார் மாணிக் சகா
Published on

திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இதற்கிடையே, பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிபுரா முதல்வராக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சகா முதல்வராக பதவியேற்றார். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com