வணிக வளாக கழிவறையில் இளம்பெண் ஊழியரை பலாத்காரம் செய்த மேலாளர்

பயந்து போன இளம்பெண் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு வந்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்தார்.
வணிக வளாக கழிவறையில் இளம்பெண் ஊழியரை பலாத்காரம் செய்த மேலாளர்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கார்கேசர் பகுதியில் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் திருமணமாகாத 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். காஜா பஷீர் (35) என்பவர் வணிக வளாகத்தின் மேலாளராக இருந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் அங்குள்ள கழிவறைக்கு சென்றார். இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற காஜா பஷீர் வலுக்கட்டாயமாக கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். காஜா பஷீரின் மிரட்டலால் பயந்து போன இளம்பெண் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு வந்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இளம் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இளம்பெண்ணின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காஜா பஷீரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com