மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்... பெண்ணுக்கு மது ஊற்றிக்கொடுத்து கற்பழித்தவர் கைது

சாலையில் சென்ற சிலர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சம்பவத்தின் போது அந்த பெண்ணை தாக்கிய லோகேஷ், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி விட்டு சென்றுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்... பெண்ணுக்கு மது ஊற்றிக்கொடுத்து கற்பழித்தவர் கைது
Published on

போபால்:

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சாலையில் வைத்து ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை கற்பழித்த லோகேஷ் என்பவரை கைது செய்தனர். இவர் அந்த பெண்ணை திருணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த பெண்ணுக்கு மது ஊற்றிக்கொடுத்துள்ளார்.

பின்னர் போதையில் இருந்த பெண்ணை கற்பழித்துள்ளார். அந்த வழியாக சாலையில் சென்ற சிலர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது அந்த பெண்ணை தாக்கிய லோகேஷ், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி விட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து லோகேஷை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com