உத்தரகாண்டில் மேக வெடிப்பு- பலத்த மழை கொட்டியது

மேக வெடிப்பு காரணமாக கொட்டிய மழையால் பல ஆறுகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.பேரிடர் மீட்புகுழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமத்தில் சிக்கி இருந்த மக்கள் அனைவரையும் மீட்டனர்.
உத்தரகாண்டில் மேக வெடிப்பு- பலத்த மழை கொட்டியது
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியின் சர்கெட் கிராமத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த மழை கொட்டியது. பல ஆறுகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பேரிடர் மீட்புகுழுவினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று கிராமத்தில் சிக்கி இருந்த மக்கள் அனைவரையும் மீட்டனர். சிலர் அருகில் உள்ள ரெசார்ட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com