குஜராத்தில் ரசாயன லாரியில் கியாஸ் கசிவு- 6 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலி

குஜராத் மாநிலம் சூரத் அருகே இன்று அதிகாலையில் ரசாயன லாரியில் கியாஸ் கசிந்ததில் மூச்சு திணறி 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள்.
Published on

சூரத்:

குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள சச்சின் என்ற பகுதியில் ஏராளமான தொழிற்பேட்டைகள் உள்ளன. இங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையின் வெளியே ரசாயனம் ஏற்றப்பட்ட லாரி நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இன்று அதிகாலை இந்த லாரியில் இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறியது.

இதை சுவாசித்த அங்குள்ள தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 5 தொழிலாளர்கள் மூச்சு திணறி இறந்தனர்.

வாயு கசிந்ததால் தொழிற்சாலையை சுற்றி வசித்து வந்த 25-க்கும் மேற்பட்டவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்கள். இது பற்றி அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com