ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் பிரமோத் சாவந்த்

ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த பின் பேசிய பிரமோத் சாவந்த், கோவாவில் புதிய அரசு அமைப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என தெரிவித்தார்.
ஆளுநரை சந்தித்த பிரமோத் சாவந்த்
ஆளுநரை சந்தித்த பிரமோத் சாவந்த்
Published on

பனாஜி:

கோவா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பா.ஜ.க. 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பி.எஸ்.முரளிதரனிடம் வழங்கினார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும்வரை காபந்து முதல்வராக செயல்படும்படி பிரமோத் சாவந்தை கேட்டுக்கொண்டார். 

X

Maalai Malar
www.maalaimalar.com