தெலுங்கானாவில் ஆட்டோ-கார் மோதல்: 4 பேர் பலி

காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானாவில் ஆட்டோ-கார் மோதல்: 4 பேர் பலி
Published on

தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், சின்ன எல்லாபுரம், அமுதண்டாவை சேர்ந்தவர் இஸ்லாவத் ஸ்ரீனு (வயது 40). ஆட்டோ டிரைவர்.

இவரது தாய் பாப்பா (60), மகள் ரித்விக் (6), ரித்விகா (4). அவரது அத்தை சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோருடன் தனது மகன் ரித்விக்கிற்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக நல்கொண்டா மாவட்டம், நாகார்ஜுன சாகர் அருகே உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர்.

இரவு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மஹபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆட்டோ மீது மோதியது.

இதில் ஸ்ரீனு அவரது தாய் பாப்பா, மகன் ரித்விக், மகள் ரித்விகா ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com