

போபால்:
மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டத்தின் பிந்த்ரை கிராமத்தில் ஒரு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட விருந்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பி உள்ளனர். மணப்பெண்ணுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த உணவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.