கான்ட்ராக்டர் தற்கொலை விவகாரம் -மந்திரி பதவியில் இருந்து விலகினார் ஈஸ்வரப்பா

கான்ட்ராக்டர் தற்கொலை விவகாரத்தில் மந்திரி ஈஸ்வரப்பா பதவி விலகுவது தீர்வாகாது. அவர்மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சிவகுமார் குறிப்பிட்டார்.
ஈஸ்வரப்பா
ஈஸ்வரப்பா
Published on

பெங்களூரு:

கர்நாடக  மாநிலத்தில் கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை தொடர்பாக அம்மாநில மந்திரி ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ஈஸ்வரப்பா, முதல் மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதற்கிடையே, கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் மரணம் தொடர்பான வழக்கில் ஈஸ்வரப்பாவை கைது செய்யக் கோரி பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகமான விதான் சவுதாவில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில், கர்நாடக மந்திரி பதவியை ஈஸ்வரப்பா இன்று ராஜினாமா செய்தார். முதல் மந்திரி பசவராஜ் பொம்மையின் வீட்டுக்கு சென்ற ஈஸ்வரப்பா ராஜினாமா கடிதத்தை அவரிடம்  அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com