புதிய முதல்வராக தேர்வு: ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மாணிக் சாஹா

திரிபுரா மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
திரிபுராவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக் சாஹா
திரிபுராவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக் சாஹா
Published on

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல் மந்திரி பதவியை பிப்லப் குமார் தேவ் இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ராஜ்பவன் சென்று ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளேன் என தெரிவித்தார்.

அவரது ராஜினாமாவை தொடர்ந்து மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதையடுத்து திரிபுரா மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணிக் சாஹா இன்று ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com