கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மூதாட்டி கைது

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற பிரபாகரனை, அவரது மனைவி தடுத்தார். போலீசார் வழக்குப்பதிந்து சாந்தகுமாரியை கைது செய்தனர்.
கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மூதாட்டி கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு ஸ்ரீகிருஷ்ணபுரம் கடம்பழி புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன். இவரது மனைவி சாந்தகுமாரி. வயதான தம்பதிகளான இவர்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். பிரபாகரன் நோய் பாதித்து வீட்டில் இருந்து வந்தார். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் மனைவி கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற பிரபாகரனை, அவரது மனைவி தடுத்தார். அவரிடம் தகராறு செய்தது மட்டுமின்றி முரட்டுதனமாக நடந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூதாட்டி சாந்தகுமாரி, துணியால் பிரபாகரனின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சாந்தகுமாரியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com