ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கிய கவிதா- விசாரணையில் தகவல்

அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர்
ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கிய கவிதா- விசாரணையில் தகவல்
Published on

ஐதராபாத்:

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கடந்த 15-ந்தேதி தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை வருகிற 23-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மதுபான கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மொத்த வியாபாரிகளிடம் இருந்து வந்த பணத்தை ஆம் ஆத்மி கட்சியினர் பங்கு போட்டு கொண்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா ரூ.100 கோடி வழங்கி உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com