உத்தரபிரதேசம் அருகே கோவில் கூட்டத்தில் சிக்கி பக்தர் பலி

உத்தரபிரதேசம் பாங்கே பிகாரி கோவில் கூட்டத்தில் சிக்கி பக்தர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்தர் பலி
பக்தர் பலி
Published on

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் லட்சுமன் (வயது 65). இவர் அங்குள்ள உள்ள பாங்கே பிகாரி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்டத்தில் லட்சுமன் சிக்கிக் கொண்டார். இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதை பார்த்த உறவினர்கள் உடனே அவரை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லட்சுமன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் நடுவே அணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக பாதாள சுரங்கப்பாதை கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கப்பாதை இடிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 5 தொழிலாளர்களை மீட்டனர். மேலும் பல தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com