என் மலர்
இந்தியா

டெல்லியில் மேம்பாலம் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுப்பு
- உயிரிழந்த பெண்ணின் தலை, சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியில் கீதா காலனியில் உள்ள மேம்பாலம் அருகே புதர்மண்டி கிடந்த பகுதியில் மனித உடல் பாகங்கள் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு பெண்ணின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. சில உடல் பாகங்ககளை அங்குள்ள வனப் பகுதியில் தேடி வருகிறார்கள்.
இதற்காக மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது. உயிரிழந்த பெண்ணின் தலை, சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






