திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை

வீட்டின் முன்பு சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை, வடசேரிகோணத்தை சேர்ந்தவர் சங்கீதா.

இவர் கிளிமானூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி சென்றனர்.

அப்போது வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓடி செல்வதை கண்டனர். மேலும் வீட்டின் முன்பு சங்கீதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் சங்கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

அந்த வாலிபர் தான் சங்கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அந்த வாலிபர் யார்? எதற்காக அவர் சங்கீதாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com