கல்லூரி மாணவியை கொல்ல 3 நாட்களுக்கு முன்பே திட்டம்- டெல்லி கொலையில் கைதான காதலன் 'திடுக்' தகவல்

இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார். இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கல்லூரி மாணவியை கொல்ல 3 நாட்களுக்கு முன்பே திட்டம்- டெல்லி கொலையில் கைதான காதலன் 'திடுக்' தகவல்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விபரம் வருமாறு:-

தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகரை சேர்ந்தவர் நர்கிஸ் (வயது 25). கல்லூரி மாணவியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள விஜய் மண்டல் பூங்காவிற்கு சென்றார். அங்கு அவரது உறவினரான இர்பான் (வயது 28)என்பவரும் வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இர்பான் இரும்பு கம்பியால் நர்கிசை சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் இர்பானை கைது செய்தனர்.

விசாரணையில் அவரும், நர்கிசும் காதலித்து வந்தது தெரியவந்தது. இர்பான் ஒரு தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு நர்கிசை திருமணம் செய்து வைக்க நர்கிசின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் நர்கிஸ் இர்பானுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இது இர்பானுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனவே தனக்கு கிடைக்காத நர்கிசை கொலை செய்ய திட்டமிட்ட அவர் நர்கிஸ் தினமும் செல்லும் பாதைகளில் அறிந்து வைத்தார்.

மேலும் நர்கிஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்ததை பார்த்த இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் நேற்று பூங்காவில் நர்கிசுடன் வாக்குவாதம் செய்ததும், அப்போது இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com