காதலனுடன் காரில் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி மாணவி கற்பழிப்பு

பிரசாந்த் விகாரில் காதலி தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் அவரை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் போல நடித்த ரவி சோலங்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலனுடன் காரில் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி மாணவி கற்பழிப்பு
Published on

புதுடெல்லி:

டெல்லி பிரசாந்த் விகார் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று தனது காதலனுடன் காரில் தனிமையில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த ரவி சோலங்கி என்பவர் காதலர்கள் நெருக்கமாக இருந்ததை தனது செல்போனில் அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.

பின்னர் காதல் ஜோடியினர் அங்கிருந்து காரில் புறப்பட்டதும் அவர்களை ரவி சோலங்கி மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றார்.

பிரசாந்த் விகாரில் காதலி தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் அவரை இறக்கி விட்டு அங்கிருந்து சென்றார். இதை பின் தொடர்ந்து சென்று கண்காணித்த ரவி சோலங்கி உடனே அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்தார்.

படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை தடுத்து நிறுத்தி தான் ஒரு போலீஸ்காரர் என்று கூறி காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காட்டினார். இதை பார்த்து கல்லூரி மாணவி அதிர்ச்சி அடைந்தார். தன் ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினார். இதற்கு மாணவி உடன்பட மறுத்தார். உடனே வலுக்கட்டாயமாக ரவி சோலங்கி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நடந்த விவரம் குறித்து மாணவி தனது காதலனிடம் கண்ணீர் மல்க கூறினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் போல நடித்த ரவி சோலங்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com