கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்- ஒரு வருடம் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்

வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர்.கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.
கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்- ஒரு வருடம் மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி.

இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். மாணவியை தனிமையில் அழைத்துச் சென்ற வாலிபர் அவருடன் உல்லாசமாக இருந்தார்.

மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். வாலிபர் அந்த வீடியோவை தனது நண்பர்கள் 2 பேருக்கு அனுப்பி வைத்தார்.

வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர். தங்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார்.

தங்களுடன் உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்தால் காதலனோடு தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மாணவியை மிரட்டினர். இதனால் பயந்து போன மாணவி காதலனின் 2 நண்பர்களுடனும் உல்லாசமாக இருந்தார்.

அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் அவர்களின் நண்பர்கள் 3 பேருக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர்.

அவர்களும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதனால் விரக்தி அடைந்த மாணவி இது குறித்து அவரது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார்.

அவர் தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவர் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கூட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com