ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மற்றும் ஸ்ரீநகரில் கடந்த இரண்டு நாட்களில் அடுத்தத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று மீண்டும் புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கி சூடு
துப்பாக்கி சூடு
Published on

ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜ்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பயங்கரவாதிகளை தேடும் பணி நீடித்து வருகிறது.

முன்னதாக, ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் போலீஸ் முகாம் அருகே நேற்று முன்தினம் மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இதேபோல், காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com