திருப்பதி அருகே கார் கவிழ்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் பலி

பூதலப்பட்டு-நாயுடு மங்கலம் இடையே பி.கொத்தகோட்டை என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் போலீஸ்காரர் அனில் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
திருப்பதி அருகே கார் கவிழ்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் பலி
Published on

திருப்பதி:

கர்நாடக மாநில போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று திருப்பதிக்கு வந்தனர்.

விசாரணை முடிந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காரில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். சித்தூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூதலப்பட்டு-நாயுடு மங்கலம் இடையே பி.கொத்தகோட்டை என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.

காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் போலீஸ்காரர் அனில் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

மேலும் காரில் இருந்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு நிஷாந்த் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com