டெல்லியில் இன்று கட்டிடத்தில் தீ விபத்து- 5 பேர் படுகாயம்

தீ விபத்தில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்பட 10 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
தீ
தீ
Published on

புதுடெல்லி:

டெல்லி துவாராகா பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் 52 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கட்டிடத்தின் மீட்டர் பெட்டியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் கட்டிடத்தில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் 24 பெண்கள் உள்பட 52 பேரை மீட்டனர். இதில் 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்பட 10 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. தீப்பிடித்தற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com