டெல்லி மாடல் போல் இமாச்சலப் பிரதேசத்திலும் நேர்மையான அரசு அமையும்- முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

இமாச்சலப் பிரதேச மக்கள் இதுவரை மூன்றாம் தரப்புக்கு இடம் கொடுத்ததில்லை. எனவே இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

இமச்சாலப் பிரதேச மக்கள் இதுவரை மூன்றாம் தரப்புக்கு இடம் கொடுத்ததில்லை. எனவே இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாடல் போல் இமாச்சலப் பிரதேசத்திலும் நேர்மையான அரசு அமையும் என்று பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

டெல்லி மாடல் என்றால் நேர்மையான அரசு என்று அர்த்தம். இமாச்சலப் பிரதேசத்தின் சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் வித்தியாசமாக இருப்பதால், அங்கு நேர்மையான அரசாங்கம் இருக்க முடியாது என்று ஜெய்ராம் கூறுகிறார்.

கேள்வி சூழ்நிலைகள் அல்ல ஜெய்ராம் அவர்களே, நோக்கம். உங்களுடைய எண்ணம் தெளிவாக உள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியைப் போல் ஆம் ஆத்மி இமாச்சலப் பிரதேசத்திலும் நேர்மையான ஆட்சியைக் கொடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com