ஒமைக்ரான் தொற்றை சமாளிக்க நாங்கள் தயார்-அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பினும் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் முதன்முதலாக கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், பெங்களூரு டாக்டர் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத்,  டெல்லி, ஆந்திரா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் சுமார் 38 பேர் ஒமைக்ரான்தொற்றால் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது கேரளாவிலும் ஒமைக்ரான் ரைவஸ் காலூன்றி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

ஒமைக்ரான் அச்சுறுத்தலைச் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால், தேவையான கட்டுப்பாடுகளை விதிப்போம். தற்போது, எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை முடிந்ததும் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com