காண்ட்ராக்டர் தற்கொலை: கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வலியுறுத்தி அமித்ஷா வீடு முற்றுகை

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வலிறுத்தியும், பதவி நீக்கம் செய்யக்கோரியும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
முற்றுகை போராட்டம்
Published on

கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் இன்டல்கா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல் காண்டிராக்டரான இவர் ஊரக வளர்ச்சி துறை மந்திரி ஈஸ்வரப்பா தன்னிடம் 40 சதவீத கமி‌ஷன் கேட்பதாக புகார் கூறி இருந்தார்.

தொடர்ந்து காண்டிராக்டர் சந்தோஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் தனது தற்கொலைக்கு மந்திரி ஈஸ்வரப்பாதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து, காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை தொடர்பாக கர்நாடக மந்திரி ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பிரிவில் உடுப்பி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல ஈஸ்வரப்பா உதவியாளர்கள் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது.

இந்நிலையில், கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வலிறுத்தியும், பதவி நீக்கம் செய்யக்கோரியும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com