8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது

8 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று வன்முறை நடந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது
சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் பகுதியில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பஞ்சாயத்து துணை தலைவர் பாதுதேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போக்துய் என்ற கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் வீடுகள் கொளுத்தபட்டன. 2 குழந்தைகள் உள்பட 8 பேர் எரித்துகொல்லப்பட்டனர்.இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை இன்று தொடங்கியது. சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று வன்முறை சம்பவம் நடந்த கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com