ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட 5-வது விமானம் டெல்லி வந்தடைந்தது

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் விதமாக ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
டெல்லி வந்தடைந்த இந்தியர்கள்
டெல்லி வந்தடைந்த இந்தியர்கள்
Published on

புதுடெல்லி:

உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைக்காக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் இன்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டது. வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இதை உறுதிபடுத்தினார்.

இந்நிலையில், புகாரெஸ்டில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை  8 மணி அளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com