வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 160 கி.மீ வேகத்தில் செல்லும் 25 புதிய சரக்கு ரெயில்கள்- சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகிறது

டிசம்பர் மாதத்திற்குள் இந்த புதிய சரக்கு ரெயில்கள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு ரெயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுடெல்லி:

உள்நாட்டு தொழில் நுட்பத்தில் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வந்தே பாரத் ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக சரக்கு ரெயில்கள் இயக்க இந்தியன் ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த சரக்கு ரெயில்கள் அமைக்கும் சென்னை ஐ.சி.எப்.பில் தற்போது நடைபெற்று வருகிறது. சரக்கு ரெயில்களை புதிதாக தயாரிக்கும் பணியில் ரெயில் பெட்டி தொழிற் சாலை ஈடுபட்டுள்ளது.

இந்த சரக்கு ரெயில் 16 பெட்டிகளை கொண்டது. இதில் 2 பெட்டிகளில் குளிரூட்டல் வசதி இருக்கும். 16 பெட்டிகளை கொண்ட இந்த புதிய சரக்கு ரெயில் ஒன்றை தயாரித்து ரூ.60 கோடி செலவாகும். 45 வேகன்கள் கொண்ட சாதாரண சரக்கு ரெயிலை இதற்கான செலவு 3 மடங்கு அதிகமாகும்.

இந்த புதிய சரக்கு ரெயில்களை 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். தற்போதுள்ள ரெயில் பாதைகளில் இவ்வளவு வேகத்தில் இந்த சரக்கு ரெயில்களை பயன் படுத்தலாம். இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சரக்கு ரெயில்கள் 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

புதிய சரக்கு ரெயில்கள் பெருநகரங்கள் மற்றும் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும். இதன் மூலம் ரெயில்வேயில் செல்லும் சரக்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகமாகும்.

டிசம்பர் மாதத்திற்குள் இந்த புதிய சரக்கு ரெயில்கள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு ரெயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com