ஜம்மு காஷ்மீர் - சோபியான் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com