500 ரூபாய்க்காக குடுமிப்பிடி சண்டை - விசாரணையை எதிர்நோக்கும் சுகாதார ஊழியர்கள்

பீகார் மாநிலத்தில் 500 ரூபாய்க்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் குடுமிப்பிடி சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதார ஊழியர்களை விலக்குபவர்
சுகாதார ஊழியர்களை விலக்குபவர்
Published on

பாட்னா: 

பீகார் மாநிலத்தின் ஜமூய் மாவட்டத்தில் லக்‌ஷ்மிபூர் பகுதியில் சுகாதார மையம் அமைந்துள்ளது.

நேற்று அங்கு ஒரு குழந்தைக்கு காசநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியதற்கு குழந்தையைக் கொண்டு வந்த அங்கன்வாடி ஊழியரிடம் அந்த நர்சு 500 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்தார்.

இதுதொடர்பாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இருவரும் குடுமிப்பிடி சண்டை போட்டனர். மேலும், செருப்பாலும் அடித்துக் கொண்டனர். இதைப் பார்த்த ஒருவர் இருவரையும் விலக்க முயன்றார். 

இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. தகவலறிந்து அம்மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் இருவர் மீதும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com