search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    9-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை... 10-ம் வகுப்பு மாணவனுக்கு வலைவீச்சு
    X

    9-ம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை... 10-ம் வகுப்பு மாணவனுக்கு வலைவீச்சு

    • கடந்த ஆகஸ்டு மாதம் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • குழந்தையை மேல் சிகிச்கைக்காக சிக்கப்பல்லாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பாகேபல்லி தாலுகா கன்னம்பள்ளியை சேர்ந்த 14 வயதுடைய ஒரு மாணவி தும்கூர் மாவட்டம் மதுகிரியில் உள்ள சமூக நலத்துறை விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து விடுதி காப்பாளர் மாணவியின் தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் தாய் விடுதிக்கு வந்து பாகேபல்லியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைகேட்டு மாணவியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் அந்த மாணவிக்கு சுமார் 2.2 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையை மேல் சிகிச்கைக்காக சிக்கப்பல்லாப்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாகேப்பல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கும் அவர் படித்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த ஒரு மாணவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் மாணவி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அந்த நேரத்தில் அவரது கர்ப்பம் தெரியவில்லை. மேலும் மாணவி யாரிடமும் இதைபற்றி சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற போதுதான், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து 10-ம் வகுப்பு மாணவரை தேடிவருகின்றனர். மேலும் இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் காரணமாக விடுதி வார்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×