பள்ளி மாணவியை மிரட்டி ஒரு வருடமாக பலாத்காரம்: 3 சிறுவர்கள் ஜெயிலில் அடைப்பு

ஒரு வருடமாக சிறுவர்களின் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார். வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார்.
பள்ளி மாணவியை மிரட்டி ஒரு வருடமாக பலாத்காரம்: 3 சிறுவர்கள் ஜெயிலில் அடைப்பு
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மென்டாடா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி. இவரது பெற்றோர் வெளியூரில் வசிக்கின்றனர்.

மாணவி அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர்.

இதனிடையில் கடந்த ஆண்டு சிறுவன் மாணவியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தான். தொடர்ந்து அவனது நண்பர்கள் 3 பேரிடம் இதனை தெரிவித்தான்.

இதைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் மாணவியை தனிமையில் சந்தித்து மிரட்டினர். மாணவியை அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்தனர்.

ஒரு வருடமாக அவர்கள் மிரட்டலுக்கு அடிபணிந்து மாணவி வெளியே சொல்லாமல் பயத்தில் இருந்தார். இதனால் வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியான சூழ்நிலைக்கு மாணவி தள்ளப்பட்டார். இதனை கவனித்த அவரது பாட்டி மாணவியிடம் விசாரித்தார்.

அப்போது தன்னை அங்குள்ள சிறுவர்கள் பலாத்காரம் செய்ததை மாணவி தெரிவித்தார். இது குறித்து கஜபதி நகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

மேலும் 4 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேரை கைது செய்து சிறுவர் ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com