மகாராஷ்டிரத்தில் 1000 ஜெலட்டின் குச்சிகள், 1000 டெட்டனேட்டர்கள் பறிமுதல்- 3 பேர் கைது

மகாராஷ்டிரத்தில் 1000 ஜெலட்டின் குச்சிகள், 1000 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெலட்டின் குச்சிகள்
ஜெலட்டின் குச்சிகள்
Published on

தானே:

மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம், பிவாண்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு காரில் வந்த 3 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக இருந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த காரில் தீவிர சோதனை நடத்தினார்கள். அந்த காரில் 1000 ஜெலட்டின் குச்சிகள், 1000 டெட்டனேட்டர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்தனர். வெடிபொருட்களை கொண்டு சென்ற அல்பேஸ் என்கிற கிராஜ்பட்டீல், பங்கஜ் சவுகான், சமீர் என்கிற ராமசந்திர வேதா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இந்த வெடிபொருட்களை திருடி இருந்ததும், அதை விற்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. இந்த 3 பேரும் பக்கத்து மாவட்டமான மால்கார் அருகே உள்ள விக்கிரமாத் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

வெடிமருந்து தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com