திருமண கொண்டாட்டத்தில் 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்

திருமண நாளை மறக்கமுடியாத நாளாக மாற்ற, செய்யும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பெரும்பாலும் சந்தோசத்தை தந்தாலும், சில நேரங்களில் பாதகமாக முடிந்து விடுகிறது.
திருமண கொண்டாட்டத்தில் 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்
திருமண கொண்டாட்டத்தில் 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்
Published on

ராய்ப்பூர் :

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அந்த நாளை மறக்கமுடியாத நாளாக மாற்ற, அவர்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அதில் கொண்டு வருவார்கள். அது பெரும்பாலும் சந்தோசத்தை தந்தாலும், சில நேரங்களில் பாதகமாக முடிந்து விடுகிறது. அதுபோல சத்தீஸ்காரில் நடந்த திருமணம் ஒன்றில் விபரீதம் ஏற்பட்டது.

சத்தீஸ்கார் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி தங்களுடைய திருமண நிகழ்ச்சியின்போது மேடைக்கு மேலே 12 அடி உயரத்தில் வட்ட வடிவிலான ஊஞ்சல் ஒன்றில் நின்று ஆடி கொண்டிருந்தனர். ஊஞ்சலை சுற்றி கண்கவரும் வகையில் பட்டாசுகள் வெடிக்க, கீழே நடனக்கலைஞர்கள் நடனமாட, திருமண ஜோடி உற்சாகத்துடன் ஊஞ்சலில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் முறிந்ததில், திருமண ஜோடி 12 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். இதனால் மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் மணமகன், மணமகள் இருவருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை. மணமக்கள் கீழே விழுந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com