பசுக் கடத்தல் சந்தேகம்.. முதியவரை நிர்வாணப்படுத்தி டூ வீலரில் கட்டி இழுத்துச்சென்ற கும்பல்

ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பசுக் கடத்தல் சந்தேகம்.. முதியவரை நிர்வாணப்படுத்தி டூ வீலரில் கட்டி இழுத்துச்சென்ற கும்பல்
Published on

ஜார்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு அருகே உள்ள அம்ரோரா கிராமத்திற்கு அருகே, சரஸ்வதி ராம் என்ற அந்த 60 வயது முதியவர் நேற்று முன்தினம் தனது கால்நடைகளை வண்டியில் ஏற்றி அருகில் உள்ள பன்ஷிதர் நகர் என்ற சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர்ம், முதியவரை மறித்து, மாடு கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரது ஆடைகளைக் களைந்து இரு சக்கர வாகனத்தில் கட்டி இழுத்துச் சென்று சிறிதுதூரத்தில் கட்டை அவிழ்த்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சமயம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்த மூவரில் ஒருவரை கைது செய்துள்ளனர். பசுவதை செய்வதாகவும், பசு கடத்தல் செய்வதாகவும் நடக்கும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com