கேரளாவில் முன்னாள் முதல்-மந்திரி ஈ.கே.நாயனார் மனைவியிடம் ஆசி பெற்ற சுரேஷ்கோபி

நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார். சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார்.
கேரளாவில் முன்னாள் முதல்-மந்திரி ஈ.கே.நாயனார் மனைவியிடம் ஆசி பெற்ற சுரேஷ்கோபி
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் பாரதிய ஜனதா சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ்கோபி. மத்திய இணை மந்திரி பதவியேற்ற இவர், டெல்லியில் இருந்து கேரளா திரும்பியதும் கோழிக்கோடு தாலி கோவில், பழையாங்கடி மாடைக்காவு கோவில் மற்றும் பரசினிக்கடவு கோவில்களுக்குச் சென்றார்.

தொடர்ந்து அவர், கண்ணூர் கல்லியசேரியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், சி.பி.எம். தலைவருமான ஈ.கே.நாயனார் வீட்டுக்குச் சென்றார். அங்கு நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.

சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டார். இது தொடர்பாக சாரதா கூறுகையில், சுரேஷ்கோபி, நாயனாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். பலமுறை இங்கு வந்துள்ளார். கண்ணூர் வரும்போதெல்லாம், எனக்கு போன் செய்து அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என கூறுவார். இப்போது அவர் பழைய சுரேஷ் இல்லை. மிகவும் பிசியாக இருக்கிறார். அவர் என்னை பார்க்க வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com