மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி குங்குமம் வைத்த 8-ம் வகுப்பு மாணவன் கைது

8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார்.போலீசார் மாணவனை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.
மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி குங்குமம் வைத்த 8-ம் வகுப்பு மாணவன் கைது
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு நண்பருடன் சென்றார். அங்கு மாணவியை பிடித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். பின்னர் அந்த மாணவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு ஓடிவிட்டான்.

இதுபற்றி மாணவி போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவன் வந்த மோட்டார் சைக்கிள் மூலம் அவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com