போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!

“போராட்டக்காரராக இருப்பதுதான் என் வேலை என்பது போல என்னை ஏன் பொறுப்பேற்கச் சொல்கிறீர்கள்?”
போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நீக்கம் - கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!
Published on

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று கரப்பான்பூச்சி கட்சி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், அதில் பங்கேற்காமல், பர்கர் சாப்பிட்டுக் கொண்டும், விமர்சிப்பவர்களைக் கேலி செய்துகொண்டும் இருந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகின.

இதனைத்தொடர்ந்து சிஜேபியின் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்கள் காவல்துறையின் கடுமையான அடக்குமுறையை எதிர்கொண்ட நேரத்தில், அவர் இவ்வாறு நடந்துகொண்டது "மிகவும் உணர்ச்சியற்றது" மற்றும் பொறுப்பற்றது என்று சிஜேபி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு, போராட்டத்தில் ஈடுபட்ட பலரைப் போலவே தானும் இரண்டு நாட்களாக தூங்கவில்லை என்றும், பசியின் காரணமாகவே பர்கர் சாப்பிட்டதாகவும் விஜேதா தஹியா விளக்கம் அளித்துள்ளார்.

“போராட்டக்காரராக இருப்பதுதான் என் வேலை என்பது போல என்னை ஏன் பொறுப்பேற்கச் சொல்கிறீர்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com