யோகா பயிற்சி மையத்தில் பெல்ஜியம் நாட்டு பெண்ணை கற்பழித்த சித்த வைத்தியர் கைது

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு பெண், நெய்யார் பகுதியில் தங்கி இருந்து யோகா கற்று வந்தார்.அதிர்ச்சி அடைந்த பெல்ஜியம் பெண் இது பற்றி நெய்யார் அணை போலீசில் புகார் செய்தார்.
யோகா பயிற்சி மையத்தில் பெல்ஜியம் நாட்டு பெண்ணை கற்பழித்த சித்த வைத்தியர் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யார் அணை பகுதியில் ஏராளமான யோகா பயிற்சி மையங்கள் உள்ளன.

இந்த பயிற்சி மையங்களில் வெளிநாடுகளை சேர்ந்த பலர் யோகா கற்று வருகிறார்கள். இதற்காக அவர்கள் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள்.

இதில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒரு பெண், நெய்யார் பகுதியில் தங்கி இருந்து யோகா கற்று வந்தார்.

பெல்ஜியம் பெண் யோகா பயிற்சி மையத்திற்கு செல்லும் வழியில் ஒரு ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா மையம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஷாஜி (வயது 44) என்பவர் நடத்தி வந்தார்.

சித்த வைத்தியரான அவர் பெல்ஜியம் பெண்ணிடம் நட்பாக பழகினார். இதனால் அந்த பெண், ஷாஜி நடத்தும் யோகா மையத்திற்கு சென்றார். அங்கு அவரை சித்த வைத்தியர் ஷாஜி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெல்ஜியம் பெண் இது பற்றி நெய்யார் அணை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சித்த வைத்தியர் ஷாஜியை கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com