தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார் பிரதமர் மோடி- சிவராஜ் சிங் சவுகான்

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.முழு நாட்டையும் தனது குடும்பமாக கருதி, பிரதமர் மோடி பணியாற்றுகிறார்.
தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார் பிரதமர் மோடி- சிவராஜ் சிங் சவுகான்
Published on

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி இன்று 111-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.

அதில், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன். நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அல்லது அவரது பெயரில் ஒரு மரத்தை நடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில்,

மூன்றாவது முறையாக பிரதமரான பின் பிரதமர் மோடி, 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சியை முதன்முறையாக நடத்தினார்.

முழு நாட்டையும் தனது குடும்பமாக கருதி, பிரதமர் மோடி பணியாற்றுகிறார். அவர் தேசத்தின் நலனுக்காக பணியாற்றுகிறார். மேலும் எங்களை ஊக்குவிக்கிறார் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com