லதா மங்கேஷ்கர் நினைவாக அருங்காட்சியகம்: சிவராஜ்சிங் சவுகான் அறிவிப்பு

லதா மங்கேஷ்கர் பெயரில் இந்தூரில் கல்லூரி அமைக்கப்படும் என்றும், அவர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார்.
சிவராஜ்சிங் சவுகான், லதா மங்கேஷ்கர்
சிவராஜ்சிங் சவுகான், லதா மங்கேஷ்கர்
Published on

மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நினைவாக மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், நேற்று போபாலில் மரக்கன்று நட்டு வைத்தார்.

பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், லதா மங்கேஷ்கர் பிறந்த ஊரான இந்தூரில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் இடம்பெறும் அருங்காட்சியகமும், மியூசிக் அகாடமியும் நிறுவப்படும் என்றும் கூறினார்.

மேலும், லதா மங்கேஷ்கர் பெயரில் இந்தூரில் கல்லூரி அமைக்கப்படும் என்றும், அவர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்தார். இந்தூரில் லதா மங்கேஷ்கர் சிலை நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com