ஜெகன் மோகன் ரெட்டி பற்றி பேசுகையில் கண்கலங்கிய ஷர்மிளா

என்னை ஜெகன் மோகன் ரெட்டி கோர்ட்டுக்கு இழுத்துச் சென்றார்.இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி பற்றி பேசுகையில் கண்கலங்கிய ஷர்மிளா
Published on

திருப்பதி:

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய தங்கையும் மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அவருடைய தந்தை ராஜசேகர ரெட்டிக்கு சொந்தமான சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன பங்குகள் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து ஷர்மிளா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல தியாகங்கள் செய்துள்ளேன். பாத யாத்திரையின் போது அர்ப்பணிப்போடு நடந்து கொண்டேன். ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரி ஆவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் என்னுடைய அம்மாவைப் போல நானும் அயராது உழைத்தேன்.

வெற்றிக்காக நாங்கள் எல்லாவற்றையும் செய்தோம். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு என்ன செய்திருக்கிறார். அவர் எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் அநீதி இழைத்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக நான் 4 சுவற்றுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னை ஜெகன் மோகன் ரெட்டி கோர்ட்டுக்கு இழுத்துச் சென்றார்.

இது நியாயமா? எங்கள் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கள் தந்தையின் விருப்பப்படியே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீதி வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனது அண்ணன் குறித்து பேசியது ஷர்மிளா கண்ணீர் விட்டு அழுதார். அவர் கண்கலங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com