மோடியுடன் சீஷெல்ஸ் அதிபர் சந்திப்பு.. சீஷெல்ஸ் நாட்டுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு அறிவிப்பு

நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.1,000 மெட்ரிக் டன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியா வழங்குவது உள்ளிட்ட முடிவுகளும் எப்பட்டன.
மோடியுடன் சீஷெல்ஸ் அதிபர் சந்திப்பு.. சீஷெல்ஸ் நாட்டுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு அறிவிப்பு
Published on

இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவையொட்டி அமைந்துள சிறிய தீவு நாடு சீஷெல்ஸ்.

இந்தியாவுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினியுடன் பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்தியா - சீஷெல்ஸ் இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன.

தொடர்ந்து சீஷெல்ஸ் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு பொருளாதார தொகுப்பு நிதியாக 17.50 கோடி டாலர் தொகையை இந்தியா அறிவித்துள்ளது.

இந்த நிதி, சீஷெல்சில் வீட்டுவசதி, மின்சார வாகனங்கள், தொழில் பயிற்சி, சுகாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும்.

மருந்துவம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கடல்சார் அறிவியல் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு, 1,000 மெட்ரிக் டன் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை இந்தியா வழங்குவது உள்ளிட்ட முடிவுகளும் இதில் எப்பட்டன.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com