பாலியல் புகார்: நடிகர் சித்திக்கிற்கு எதிரான ஆதாரங்கள் சிக்கின

சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது.
பாலியல் புகார்: நடிகர் சித்திக்கிற்கு எதிரான ஆதாரங்கள் சிக்கின
Published on

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

நடிகர் சித்திக் மீது நடிகை கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வர்களின் மீதான குற்றச் சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை குழுவிற்கு கிடைத்துள்ளது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் குறிப்பிட்ட அறையில் நடிகர் சித்திக் தங்கியிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தி ருக்கிறது.

மேலும் நடிகையின் நண்பர் அளித்துள்ள வாக்கு மூலம், சம்பவத்திற்கு பிறகு நடிகை மனநல மருத்துவ ரிடம் சிகிச்சை பெற்றது உள்ளிட்ட சம்பவங்கள் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.அதனடிப்படையில் நடிகர் சித்திக்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படலாம் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com