ரூ.8,813 கோடி மதிப்பிலான காசோலையை நிதிஅமைச்சரிடம் வழங்கிய எஸ்.பி.ஐ

2025-26 நிதியாண்டில் எஸ்.பி.ஐ வங்கி ரூ.80,032 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 12.88 சதவீதம் வளர்ச்சியாகும்.
SBI chief hands over ₹8,813 crore cheque to Finance Minister
Published on

இந்தியாவில் 1955ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி தேசியமயமாக்கப்பட்ட போது, அதன் 60 சதவீத பங்குகளை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டது.

இந்திய அரசு தற்போது எஸ்பிஐ வங்கியில் ஏறக்குறைய 55 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது, இதன்மூலம் வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக இந்திய அரசு விளங்குகிறது.

இதையடுத்து தற்போதைய 2025-2026 நிதியாண்டில் எஸ்.பி.ஐ வங்கி ரூ.80,032 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 12.88 சதவீதம் வளர்ச்சியாகும்.

மேலும் நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ-யின் ஒட்டுமொத்த வணிகம் ரூ.109 டிரில்லியனைத் தாண்டியது.

இந்நிலையில் இந்த நிதியாண்டில் ஏற்பட்ட லாபம் மற்றும் வணிக வளர்ச்சி பங்கு ஆதாயத்திலிருந்து ரூ.8,813 கோடி மதிப்பிலான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எஸ்பிஐ வங்கியின் தலைவர் சி.எஸ்.செட்டி வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com